Monday, November 13, 2017

IELTS பரீட்சை எப்படியானது ? அதற்கு நீங்கள் தகுதியாவது எப்படி ? (தமிழ் விளக்கம்)



IELTS என்பது வழமையான சாதாரண ஆங்கிலப்பரீட்சை அல்ல என்பதை அதை எடுக்க முன்வரும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இலங்கை முழுவதும்  பல்லாயிரக்கணக்கான அப்பாவி மாணவர்கள் இந்தப் பரீட்சை பற்றி முறையாக அறியாது - தம் தகுதிகளை அதிகரிக்காது அநியாயமாக  முறையற்ற வழிகாட்டலிற்கும் பரீட்சைக்கும் பெருந்தொகையான பணத்தை இழந்து வருகிறார்கள். பணம் மட்டுமன்றி கற்றலுக்காக அவர்கள் இ‌ழந்த நேரமும் அநியாயமே.

(Want to take IELTS  ? visit this link : http://edu.kugroup.info/ielts.html )

இந்தப்பரீட்சை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் புதியவர்களுக்காக இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது. இதை முழுமையாக வாசிப்பதன் மூலம் - உங்கள்  உறுதியான வெற்றிக்கான வழிகளைத் திட்டமிடவும் இந்தப்பரீட்சைக்குரிய தகுதிகளை அதிகரித்துக்கொள்ளவும் முடியும். தேவையற்ற பண ,நேர இழப்புக்களையும் தவிர்க்கலாம்.

IELTS - என்ற  சொல்லை   விளம்பரப்பலகைகளில் கண்டுவிட்டு ஆங்கிலம் சிறப்பான நிலையில் இல்லாதவர்கள் - அல்லது ஆரம்ப நிலையிலுள்ளவர்கள் அந்த பயிற்சி நெறியில் சேர முடிவெடுக்க முடியாது. ஏனெனில்  IELTS  என்பது ஒரு ஆங்கிலக் கல்வி நெறி அல்ல. - ”சர்வதேச ஆங்கில மொழி பரீட்சை முறைமை” என்பதே IELTS என்பதன் விரிவாக்கம்(International English  Language Testing System )