IELTS என்பது வழமையான சாதாரண ஆங்கிலப்பரீட்சை அல்ல என்பதை அதை எடுக்க முன்வரும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இலங்கை முழுவதும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மாணவர்கள் இந்தப் பரீட்சை பற்றி முறையாக அறியாது - தம் தகுதிகளை அதிகரிக்காது அநியாயமாக முறையற்ற வழிகாட்டலிற்கும் பரீட்சைக்கும் பெருந்தொகையான பணத்தை இழந்து வருகிறார்கள். பணம் மட்டுமன்றி கற்றலுக்காக அவர்கள் இழந்த நேரமும் அநியாயமே.
(Want to take IELTS ? visit this link : http://edu.kugroup.info/ielts.html )
(Want to take IELTS ? visit this link : http://edu.kugroup.info/ielts.html )
இந்தப்பரீட்சை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் புதியவர்களுக்காக இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது. இதை முழுமையாக வாசிப்பதன் மூலம் - உங்கள் உறுதியான வெற்றிக்கான வழிகளைத் திட்டமிடவும் இந்தப்பரீட்சைக்குரிய தகுதிகளை அதிகரித்துக்கொள்ளவும் முடியும். தேவையற்ற பண ,நேர இழப்புக்களையும் தவிர்க்கலாம்.
IELTS - என்ற சொல்லை விளம்பரப்பலகைகளில் கண்டுவிட்டு ஆங்கிலம் சிறப்பான நிலையில் இல்லாதவர்கள் - அல்லது ஆரம்ப நிலையிலுள்ளவர்கள் அந்த பயிற்சி நெறியில் சேர முடிவெடுக்க முடியாது. ஏனெனில் IELTS என்பது ஒரு ஆங்கிலக் கல்வி நெறி அல்ல. - ”சர்வதேச ஆங்கில மொழி பரீட்சை முறைமை” என்பதே IELTS என்பதன் விரிவாக்கம்(International English Language Testing System )
இந்தப்பரீட்சையில் நீங்கள் 1-9 வரையிலான புள்ளிகளால் அளவிடப்படுவீர்கள்.சில வருடங்களின் முன்னர் கல்விக்காக வெளிநாடொன்றிற்கு செல்லும் ஒருவருக்கு 5-5.5 என்ற அளவிலான புள்ளிகள் இருந்தாலே விசா கிடைத்து வந்தது. ஆனால் கடந்த 3 வருடங்களாக இந்த புள்ளி எதிர்பார்ப்பு - குறைந்தது 6 என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது. [ யாழ்ப்பாணத்தில் இப்பயி்ற்சி நெறி பற்றி அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யவும் :http://edu.kugroup.info/ielts.html ]
இந்தத்தகமை மேற்படிப்பு, தொழில், குடிப்பெயர்வு போன்ற காரணங்களிற்காக இங்கிலாந்து,கனடா,அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளிற்கு விசா பெறத்தேவையான ஒரு பரீட்சையாகும். இந்தப் பரீட்சை ஆங்கில அறிவை வளர்ப்பதற்கான ஒரு முறை அல்ல. உள்நாட்டில் உங்கள் ஆங்கிலத்தகுதியை நிரூபிக்க இந்தப்பரீட்சை தேவையும் இல்லை. எனவே விசா பெ றும் தேவைக்காகவே இது எடுக்கப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
மருத்துவர்கள்,தாதியர்களாக வெளிநாடு செல்ல முற்படுவோர் இந்தப்பரீட்சையின் நான்கு கூறுகளிலும்(கேட்டல்,எழுதல்,வாசித்துப் பதிலிறுத்தல்,பேசுதல்) தலா 7.0 என்ற புள்ளிகளும் சராசரி 7 அல்லது 7.5 எடுக்க வேண்டியிருக்கிறது.
அப்படியெனில் இந்தப்பரீட்சைக்கான கல்வி நெறி எப்படியிருக்கும் ? - பரீ்ட்சையை எப்படிச் செய்வது என்பதே இங்கு கற்பிக்கப்படும். வகுப்புக்களில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டு - நீங்கள் விடையிறுத்த பின்னர் - அதை எப்படி சிறப்பாகச் செய்திருக்கலாம் ,உங்கள் செய்கைக்கு என்ன புள்ளிகள் கிடைக்கும் ,அதை அதிகரிப்பதங்கான நுட்பங்கள் என்ன என்பவை கற்பிக்கப்படலாம்.
எனவே முதலில் மனதில் நினைத்ததை ஆங்கிலத்தில் பிழையின்றி எழுதவும் பேசவும் தெரிந்திருந்தால் மட்டுமே இந்த பயிற்சியில் சேர்வது பயன் தரும். இதற்குரிய போதிய சர்வதேச ஆங்கில அறிவை நடைமுறையான முறையில் கற்றுக்கொள்ள யாழ்ப்பாணத்தில் கே.யு நிறுவனத்தின் ஐ-ஸ்போக்கண் கல்வி நெறியில் இணையலாம்.
சர்வதேச ஆங்கிலக்கல்வி (தனிப்பட்ட வகுப்புக்களில்) - விபரங்கள் - http://edu.kugroup.info/ispoken.html
IELTS பரீட்சைக்கான ஆயத்த வகுப்பு பற்றிய விபரங்களை இங்கே பெறலாம் : http://edu.kugroup.info/ielts.html
எங்கள் முகப்புத்தகத்தில் பழையமாணவர்கள் வழங்கியுள்ள பின்னூட்டலை(Feedback) வாசித்துப்பாருங்கள்.: https://www.facebook.com/pg/kujaffna/reviews/
IELTS பரீட்சைக்கான ஆயத்த வகுப்பு பற்றிய விபரங்களை இங்கே பெறலாம் : http://edu.kugroup.info/ielts.html
எங்கள் முகப்புத்தகத்தில் பழையமாணவர்கள் வழங்கியுள்ள பின்னூட்டலை(Feedback) வாசித்துப்பாருங்கள்.: https://www.facebook.com/pg/kujaffna/reviews/
மேலதிக விபரங்களை கே.யு கல்வி நிறுவனத்தில் நேரில் வந்து முற்றிலும் இலவசமாகப் பெற முடியும். தயவு செய்து வருவதற்கு முன்னர் தொலைபேசியில் நேர ஒதுக்கீட்டைப் பெற்று வரவும்.(KU Jaffna Hotline : 0777302882 /Office : 021-3208342 ) முன்னரே நேர ஒதிக்கீட்டைப் பெறுவதன் மூலம் உங்களிற்கு திருப்தியான விபரங்களை தேவையான நேர ஒதுக்கீட்டில் வழங்க முடியும்.
KU Education / BCBL Jaffna.
IELTS Training Centre (UK Support Education )
Jaffna,Sri Lanka.
Tel: 021-3208342/0777302882
Jaffna,Sri Lanka.
Tel: 021-3208342/0777302882
No comments:
Post a Comment