Sunday, November 14, 2021

கொரோனாப் பெருந்தொற்றுக் கால அறிவித்தல் - Great Learning Experience in a Small Space !

 20 வருடங்களிற்கு மேற்பட்ட கல்விப்பாரம்பரியமுள்ள கல்வியியலாளர்களால் இயக்கப்படும் கே.யு எடியுகேசன்( KU Education ) நிறுவனத்தின் அன்பான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிற்கா பெருந்தொற்றுக்கால அறிவித்தல் 

(14-11-2021)

IELTS in Jaffna - IELTS in Sri Lanka - KU Education

இதுவரை சர்வதேச (விசாத்தேவைகளிற்கான மற்றும் தொழில் வாய்பிற்கான) ஆங்கில கல்வி நெறிகள், பரீட்சைகள் , மற்றும் உளவியல், ஹோட்டல் முகாமைத்துவம் , புகைப்படக்கலை உள்ளிட்ட 56 ற்கும் மேற்பட்ட தொழில் - மற்றும் செயல்முறை சார்ந்த பயிற்சிகளையும், பயிற்சி நெறிகளிற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை நேரடியாகவும் எமது கல்விப்பங்காளர் ஊடாகவும் வழங்கி வந்து கொண்டிருந்தோம்.

2019 பிற்பகுதியில் ஆரம்பித்த கொரோனாப் பெருந்தொற்றால் பொதுமுடக்கம், ஊரடங்கு, கல்விச் செயற்பாடுகளிற்கான தடை போன்றவற்றால் அதிக பாதிப்பை கல்வித்துறை சந்தித்திருந்தது.

தனியார் உயர்கல்வியை வழங்கி வந்த பல பெரும் நிறுவனங்கள் நிரந்தரமாகவே பூட்டப்பட்டன. இன்னும் பல தற்காலிகமாக இயக்கத்தை நிறுத்தி பெரும் நஷ்டத்தையும் சந்தித்தன. நாமும் விதிவிலக்கல்ல.