20 வருடங்களிற்கு மேற்பட்ட கல்விப்பாரம்பரியமுள்ள கல்வியியலாளர்களால் இயக்கப்படும் கே.யு எடியுகேசன்( KU Education ) நிறுவனத்தின் அன்பான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிற்கா பெருந்தொற்றுக்கால அறிவித்தல்
(14-11-2021)
இதுவரை சர்வதேச (விசாத்தேவைகளிற்கான மற்றும் தொழில் வாய்பிற்கான) ஆங்கில கல்வி நெறிகள், பரீட்சைகள் , மற்றும் உளவியல், ஹோட்டல் முகாமைத்துவம் , புகைப்படக்கலை உள்ளிட்ட 56 ற்கும் மேற்பட்ட தொழில் - மற்றும் செயல்முறை சார்ந்த பயிற்சிகளையும், பயிற்சி நெறிகளிற்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை நேரடியாகவும் எமது கல்விப்பங்காளர் ஊடாகவும் வழங்கி வந்து கொண்டிருந்தோம்.
2019 பிற்பகுதியில் ஆரம்பித்த கொரோனாப் பெருந்தொற்றால் பொதுமுடக்கம், ஊரடங்கு, கல்விச் செயற்பாடுகளிற்கான தடை போன்றவற்றால் அதிக பாதிப்பை கல்வித்துறை சந்தித்திருந்தது.
தனியார் உயர்கல்வியை வழங்கி வந்த பல பெரும் நிறுவனங்கள் நிரந்தரமாகவே பூட்டப்பட்டன. இன்னும் பல தற்காலிகமாக இயக்கத்தை நிறுத்தி பெரும் நஷ்டத்தையும் சந்தித்தன. நாமும் விதிவிலக்கல்ல.
சுமார் ஒன்றரை வருடங்களிற்கு மேல் நேரடி வகுப்புக்களை கே.யு நிறுத்தியிருந்தது. எனவே பெரிய வகுப்பறை வசதிகள் எல்லாவற்றையும் கைவிட்டு தற்போது நிலவும் - நிச்சயமற்ற தன்மை காரணமாக (uncertainty-new normal) - புதிய இடத்தில் சிறிய இடவசதியடன் மிக அத்தியாவசிமாக உள்ள - கேயுவின் ஐ-ஸ்போக்கண்( I-Spoken - விரைவாக ஆங்கிலம் கற்போர்க்கானது)மற்றும் IELTS &TOEFL போன்ற வகுப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பல பௌதீக வளங்களை தியாகம் செய்தே எம்மால் தற்போது செயற்பட முடிகிறது. அழகியல் மற்றும் கேக் மேக்கிங் போன்ற பயிற்சி நெறிகள் தவிர்ந்த அனைத்துப் பயிற்சி நெறிகளும் நடைபெறுகின்றன.
உலகமும் நம் நாடும் எதிர்நோக்கி வரும் இந்தப் பெருந்தொற்றுக்கால இடர்களின்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வழங்கும் ஒத்துழைப்பு மிகவும பெரியது. தொடர்ந்தும் எம்மமுடன் ஒத்துழைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதுவும் கடந்து போகும் - உலகம் வழமைக்கு விரைவில் திரும்பவேண்டும் என்ற பிரார்த்தனைகளுடன்.-
S.Manimaran
Educationist and Lecturer
KU Education,
Knowledge Universe
0777302882
No comments:
Post a Comment